New year offer 2017

கனடா செய்திகள்

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு அதரவு தெரிவித்த குடும்பத்திற்கு நேர்ந்த கதி

11/01/2018

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, காணொளி பதிவேற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று Le Mans நகரில் வைத்து இவர்கள் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், சிரியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு ஆதரவான காணொளி ஒன்றை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்தே, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இவர்கள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பரிஸ் நகர பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் தாக்குதல் எதையும் நடத்த திட்டமிட்டிருக்கவில்லை என்றபோதும், ISIS பயங்கரவாதிககுக்கு தாம் தலை வணக்குவதாக காணொளியில் குறிப்பிட்டிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.