New year offer 2017

கனடா செய்திகள்

ஜமால் கசாக்கி ஆபத்தான இஸ்லாமியவாதி சவூதி இளவரசர் தெரிவிப்பு

11/03/2018

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசாக்கி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என சவூதி இளவரசர் சல்மான் அமெரிக்காவிடம் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்டதை சவூதி ஒப்புக் கொள்வதற்கு முன்னர் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மருமகனான குலஷ்னரிடம் உரையாடிய சவூதி இளவரசர் ஜமால் ஆபத்தான இஸ்லாமியவாதி எனவும், அவர் முஸ்லிம் பிரதர்வுட் அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்ததாக தனியார் செய்தி ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும்,. ஜமால் கொலை விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சவூதி இடையே உள்ள முரண்பாட்டினைத் தீர்ப்பதற்கு இந்த உரையாடலின் போது இளவரசர் முயன்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்தக் குற்றச்சாட்டை சவூதி திட்டவட்டமாக மறுத்துள்ளது.