கனடா செய்திகள்
யோகா கூட்டத்தில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவருக்கு நேர்ந்த விபரீதம்
11/03/2018அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் யோகா கூடத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டு நடத்தியவர் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் எனவும் துப்பாக்கிச் சூடு குறித்தும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் குறித்தும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது என புளோரிடா காவ்லதுறையினர் தெரிவித்துள்ளனர்.