New year offer 2017

கனடா செய்திகள்

சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் 12 பேர் பலி

11/04/2018

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கு அதிகமான பேர் காயமடைந்துள்ளனர்.

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் வகையில் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதற்கு ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோன்று,கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது.

இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நேற்று கிளர்ச்சியாளர்கள் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.