New year offer 2017

கனடா செய்திகள்

ஜப்பானில் 5.9 -ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பீதியில் மக்கள்

11/04/2018

ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலநடுக்கமானது,வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இருப்பினும்,நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதே போன்று ஹோக்கய்டோ தீவில் கடந்த செப்டம்பரில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.