New year offer 2017

கனடா செய்திகள்

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்

11/06/2018

ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது,ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷிட்டி இனத்தவர் அதிகம் வாழும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடித்தது.

அதேபோன்று, வடக்கு பாக்தாத் ஆடன் பகுதியில் பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் இருவர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

அதே போல், தர்மியா என்கிற நகரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது குண்டு வெடித்தது. இதில் ஒரு ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்

இதேபோல் அல்சாவரில் கார் ஒன்றில் அடியில் இருந்த குண்டு வெடித்ததில் அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சத்ர் நகரில் இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர்.