கனடா செய்திகள்
நியூ பிரவுன்ஸவிக் பகுதிகளில் 50,000 அதிகமான வீடுகளில் மின் தடை
11/06/2018நியூ பிரவுன்ஸவிக் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு புயல்கள் தாக்கியுள்ள நிலையில், 50,000 அதிகமான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
குறித்த அநத இடத்தின் அனேகமான பகுதிகள் மழை எச்சரிக்கை அல்லது காற்று எச்சரிக்கை அல்லது இரண்டு எச்சரிக்கைகளையும் கொண்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
கடந்த 24 மணி நேரங்களில் நியூ பிரவுன்ஸவிக்கில் சராசரியாக 25 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளதுடன், வடகிழக்கு பகுதிகளில் ஏறக்குறைய 60 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போதய கணிபீடுகளின்படி, இன்று இரவு நியூ பிரவுன்ஸவிக்கின் வடகிழக்கு பிராந்தியங்களில் கிடடத்தட்ட 30 மில்லிமீட்டர் மழையும், தென் பிராந்தியங்களில் ஏறக்குறைய 40 மில்லிமீட்டர் மழை பொழியக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.