New year offer 2017

கனடா செய்திகள்

புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சோகம்

11/06/2018

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்து இருப்பது சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது, ஆப்கானிஸ்தானின் வடக்கிலுள்ள பன்ஷீர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தன்று, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை குழந்தைகளுக்கு திடீரென பாதிப்பு ஏற்படவே தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் சிகிக்சை பலனின்றி குழந்தைகள் அனைத்தும் திடீரென உயிரிழந்து விட்டன.

குறித்த குழந்தைகள் அனைத்தும், பிறந்து 6 நாட்களிலிருந்து 12 நாட்கள் வரையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் , இறந்த 12 குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

மேலும், இதன் முடிவுகள் தெரிந்தபின்னர் அதுபற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.