கனடா செய்திகள்
அமெரிக்க இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்
11/07/2018அமெரிக்க இடைக்கால தேர்தலில் கீழ் சபை எனப்படும் பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
பிரதிநிதிகள் சபைக்கு 23 இடங்கள் தேவையாக உள்ள நிலையில், அதனை ஜனநாயக் கட்சி பெற்றுக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த எட்டு வருட காலத்தில் பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சி முதற்தடவையாக கைப்பற்றியுள்ளது.
எனினும், மேல் சபை எனப்படும் செனட் சபையின் அதிகாரத்தை ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளது.
டெக்சாஸ் மற்றும் டென்னசி மாகாணங்களில் இரு கட்சிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் கடும் போட்டி நீடிக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தல் இதுவாகும். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் மீதான அபிப்பிராயத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த தேர்தல் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.