New year offer 2017

கனடா செய்திகள்

ஆப்கானில் தலிபான்கள் தொடர் தாக்குதல் 8-பொலிஸார் உயிரிழப்பு

11/07/2018

ஆப்கானிஸ்தானின் ஃபராஹ் நகரில் தாலிபன்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து அந்த பகுதிகளில் தாக்குதல் நடந்து வருகிறது. அங்கு அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தானின் பராஹ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸார் 8 பேர் பலியாகினர். இந்த வாரத்தில் மட்டும் தலிபான்கள் நடத்திய இரண்டாவது தொடர் தாக்குதல் இதுவாகும்.

முன்னதாக, திங்கட்கிழமை ஃபராஹ் நகரின் எல்லையோரத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக அமெரிக்கா சமீபத்தில் வெயிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.