New year offer 2017

கனடா செய்திகள்

பாதிக்கப்பட்ட 270,000 படைவீரர்களுக்கு 165 மில்லியன் ஓய்வூதியம்

11/07/2018

ஒட்டாவாவில், பாதிக்கப்பட்ட 270,000 படைவீரர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்க மத்திய அரசாங்கம் 165 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுள்ளது.

குறித்த அறிவிப்பினை, படைவீரர் விவகார அமைச்சர் Seamus O’Regan நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அறிவித்தார்.

அதன்படி, இலட்சக்கணக்கான ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு வழங்கப்படாத ஓய்வூதியங்களை வழங்க சுமார் 165 மில்லியன் டொலரை மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது .

அந்தவகையில், மத்திய அரசாங்கம், NDP அரசாங்கத்தை வென்றவர்கள் நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து பணத்தையும் வழங்குவதையும் அவர் உறுதி செய்தார்.

மேலும், இந்த ஓய்வூதிய தொகையானது கடந்த 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தனிப்பட்ட வரி விலக்குகளில் மாற்றத்தை சரியாக கணக்கில் எடுக்காததால் வழங்கப்படாத பாதிக்கப்பட்ட சுமார் 270,000 பேருக்கு கொடுக்க உள்ளது.

இவர்களுக்காக 165 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.