New year offer 2017

கனடா செய்திகள்

ஒன்ராறியோ மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இராஜினாமா

11/10/2018

ஒன்ராறியோ மாநில அரசின் மூத்த அதிகாரியாக செயல்பட்ட ஜோன் சிங்கிளையர் என்பவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் .

குறித்த ஜோன் சிங்கிளையர், முற்போக்கு பழமைவாதக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவைகள் பிரிவின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய வந்தவர்.

இந்நிலையில், திடீரென வியாழக்கிழமை தனது பதவியை இவர் இராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், தமது பதவி விலகலுக்கான காரணம் குறித்து எதனையும் ஜோன் சிங்கிளையர் குறிப்பிடவில்லை.

இதன் மூலம், அண்மையில் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாநில அரசிலிருந்து விலகும் மூன்றாவது மூத்த முக்கிய அதிகாரியாக இவர் இடம்பெற்றுள்ளார்.

கடந்த வாரம் முற்போக்கு பழமைவாதக் கடசியின் சட்டமன்ற உறுப்பினரும், பொருளாதார அமைச்சருமான ஜிம் வில்சனும் அமைச்சரவையில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.