New year offer 2017

கனடா செய்திகள்

பிரித்தானிய போக்குவரத்து துறை அமைச்சர் ஜோ ஜோன்சன் இராஜினாமா

11/10/2018

பிரித்தானிய போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்ட ஜோ ஜோன்சன் என்பவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் .

பிரெக்சிற் தொடர்பில் புதிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்தே ஜோ ஜோன்சன் பதவி விளக்கியுள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்,பிரெக்சிற்கு இதுவரை காலமும் ஆதரவாக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக ஜோ ஜோன்சன், பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் உடன்பாடுகள் பயங்கரமான தவறுகளுடன் அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானிய மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.