New year offer 2017

கனடா செய்திகள்

ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷுக்கு அமெரிக்க அதிபர் அஞ்சலி

12/04/2018

மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்-இற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வொஷிங்டனின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டப்ள்யூ. புஷ் தனது 94ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.

ஜனாதிபதியின் இறுதிக் கிரியைகள் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அமெரிக்க மாமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதன்பின் அவரது உடல் மீண்டும் டெக்சாஸ் கொண்டு செல்லப்படும். சீனியர் புஷ்ஷின் மனைவி பார்பரா, அவரது மகள் ராபின் கல்லறை அருகே உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்த இறுதிச்சடங்கில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா கலந்து கொள்கின்றனர். அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ள ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பின்னர் இரு தடவைகள் நாட்டின் துணை ஜனாதிபதியாகவும் சேவையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.