New year offer 2017

கனடா செய்திகள்

சுற்றுச்சூழல் தினம் பிளாஸ்டிக்கை தவிர்க்க ஷாப்பிங் மால்கள் ஒப்பந்தம்

12/04/2018

தாய்லாந்து நாட்டில் சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க கடைகள், ஷாப்பிங் மால்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாடு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக கடந்த 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அவ்வகையில் இன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் இன்று தவிர்க்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. அதனை ஏற்று பல்வேறு கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க ஒப்புக்கொண்டுள்ளன.

இதையடுத்து, இதற்காக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன், முன்னணி ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகளை நடத்தும் நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும், மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.