New year offer 2017

கனடா செய்திகள்

அழிவின் விளிம்பை நோக்கும் உலகின் அசாதாரணமான சுறா வகை

12/05/2018

உலகின் அசாதாரணமான சுறா வகைகளான ரே என்னும் வகையை சேர்ந்த மீன்கள் உள்ளிட்டவை அழிவின் விளிம்பை நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அழியும் நிலையிலுள்ள 50 அரிய உயிரினங்களை கொண்ட இந்த பட்டியலில், ஒரு பேருந்தின் பாதி நீளமுள்ள வாலினால் இரையை பிடிக்கும் சுறாக்களான ரே வகையும் உள்ளடங்குகின்றது.

குறித்த ஆராய்ச்சியில், மீனவர்கள் மீன் பிடிக்கும்போது இவற்றின் மீது நடக்கும் தாக்குதல்களே அதீத வீழ்ச்சிக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

மக்களுக்கு இந்த ரே வகை சுறாக்கள் குறித்து தவறான கருத்துக்கள் உள்ளதே அதன் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதுமட்டுமின்றி, கடற்கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகள், மாங்குரோவ் காடுகளின் அழிப்பு, மாசடைந்து வரும் தண்ணீர் ஆகியவற்றாலும் இவைகள் அழிந்து வருகின்றனர்.

மேலும், இந்த அரிய வகை உயிருள்ள படிமங்களில் ஒன்றை இழந்தாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்த பரிணாமவியல் வரலாறு அழிந்துவிடும் எனவும் எப்படிப்பட்ட அச்சுறுத்தலின் கீழ் இவை உள்ளன என்பதை யாரும் புரிந்துகொள்ளவில்லை எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.