New year offer 2017

கனடா செய்திகள்

ஐரோப்பாவின் விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் மரம்

12/05/2018

உலகளாவிய ரீதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்பதற்கான நடவடிக்கையில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ள நிலையில், ஜேர்மனி புதிய சாதனை ஒன்றினை படைக்கும் நோக்கில் ஐரோப்பாவின் விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் மரத்தினை வடிவமைத்துள்ளது.

இனி இதுதொடர்பில் சற்று விரிவாக பார்க்கலாம்,

உலகிலேயே உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியது யார் என்ற போட்டியிலிருந்த ஜேர்மனி தற்போது ஐரோப்பாவிலேயே விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியுள்ளது.

முனிச் தங்க நிறுவனமான Pro Aurum, விழாக்கால அலங்கார காட்சிப் பொருளாக 2,018 தங்க நாணயங்களைக் கொண்டு ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி, அதன் மீது ஒரு பிரகாசிக்கும் தங்க நட்சத்திரத்தையும் அமைத்துள்ளது.

இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் மதிப்பு 2.3 மில்லியன் யூரோக்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பார்ப்பதற்கு அவை தங்க காகிதத்தால் பொதியப்பட்ட சாக்லேட்டுகள் போல காணப்பட்டாலும், உண்மையில் அவை 20 அவுன்ஸ் எடையுள்ள தங்க நாணயங்களாகும்.

ஆக, மொத்தத்தில் 63 கிலோ சுத்த தங்கம் இந்த மரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த கிறிஸ்துமஸ் மரம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.