New year offer 2017

கனடா செய்திகள்

கடல் நீர்மட்டம் அதிக அளவில் அதிகரிக்கக் காரணம் இயற்கையா ஆய்வில் எச்சரிக்கை

12/05/2018

உலகில் கடல் நீர்மட்டம் அதிக அளவில் அதிகரித்து வருவதற்குக் காரணம் இயற்கையல்ல மனிதச் செயல்பாடுகளினால் மாற்றமடைந்த பருவநிலைகளே என்று புதிய ஆய்வு ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக புவி வெப்பமடைதலுக்குக் காரணமான மனித உற்பத்தி, மற்றும் பல சீரழிவு நடவடிக்கைகளினால் கடல் நீர்மட்டமானது, சராசரியாக உயரும் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து வருகிறது.

குறித்த தகவலை, நேஷனல் அகாதெமி ஆஃப் சயன்ஸஸ் என்ற இதழில் ஆய்வின் மூலம் இந்த கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வின் படி சில பிராந்தியங்களில் உள்ளூர் கடல் நீர்மட்ட அதிகரிப்பு உலக சராசரியைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் உள்ல சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டல் ஆய்வு தேசிய மையத்தின் (NCAR) ஜான் ஃபாஸுல்லோ கூறும்போது,

இந்த நூற்றாண்டின் சராசரியைக் காட்டிலும் கடல் நீர்மட்டம் மேலும் 2 -3 அடி கூடுதலாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிராந்தியவாரியாக இதில் ஏற்படும் மாற்றங்கள் கடற்கரை பகுதி மக்களுக்கு மிக முக்கியமனது, அவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.