New year offer 2017

கனடா செய்திகள்

நியூ கலிடோனியாவில் 7.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை தீவிரம்

12/05/2018

நியூ கலிடோனியாவின் பசிபிக் தீவுகளில் இன்று 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, நியூ கலிடோனியாவின் லோயல்டி தீவுகளில் உள்ளூர் நேரப்படி சுமார் 3 மணி அளவில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இருப்பினும் குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை வரை எந்த தகவலும் இல்லை.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கமானது, தென்மேற்கு பசிபிக் கடல்பகுதியில் சுமார் 168 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தீவுகளுக்கு சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பூகம்ப சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நியூகலிடோனியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் நியூசிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் நியூசிலாந்து அதிகாரிகளும் இதேபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.