New year offer 2017

கனடா செய்திகள்

பிரான்ஸ் வன்முறையின் எதிரொலி ஈபிள் கோபுரம் மூடல்

12/07/2018

பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் ஜாக்கெட் என்னும் அரசுக்கெதிரான போராட்டம் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை (சனிக்கிழமை) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமான, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்டது.

இத காரணமாக, பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார்.

மேலும், பாரீஸின் சேம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். சில அருங்காட்சியகங்களும் மூடப்படும்.

கடந்த பல தசாப்தகாலங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வன்முறை கடந்த சனிக்கிழமையன்று பாரீஸில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.