New year offer 2017

கனடா செய்திகள்

சிரியாவில் கைது செய்யப்பட்ட கனேடியர்

01/06/2019

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த கனேடியர் ஒருவர் சிரியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து, வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, கிறிஸ்டீன் லீ பக்ஸ்டர் என்ற 44-வயதான கனேடியர். கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதையடுத்து, பின்னர் டிசம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து அவருடனான தொடர்பு அற்றுப்போனதாகவும் கிறிஸ்டீன் லீ பக்ஸ்டரின் தாயார் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த தாயார் கனேடிய மத்திய அரசிடம் உதவி கோரியிருந்தார். இந்நிலையில், குறித்த நபர் சிரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதை கனேடிய வெளியுறவுச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், அவரது கைது தொடர்பில் தற்போதைக்கு சிறிதளவு தகவல்கள் மட்டுமே உள்ளதாகவும் அந்த செயலகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

மேலும், அதேவேளை தனியுரிமை பாதுகாப்பு கருதி அவர் குறித்த மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்றும் வெளியுறவுத் திணைக்களம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.