New year offer 2017

கனடா செய்திகள்

ரொறன்ரோவில் குடியிருப்புகளின் வாடகை அதிகரிப்பு

01/06/2019

ரொறன்ரோவில் 2019- வருடம் முதல் குடியிருப்பு ஒன்றினை வாடகைக்கு எடுப்பதற்கு, கடந்த வருடத்தை விவாடகை அதிகரிக்கப்படும் என அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை, தேசிய வாடகை தொடர்பில் அறிக்கை தயாரிக்கும் Rentals.ca மற்றும் Bullpen நிறுவனங்களின் ஆராய்ச்சியின் மூலம் வெளியாகியுள்ளது.

அதன் படி, குறித்த 2019-ம் வருடம் ஆரம்பம் முதல் 11 விகிதத்தால் குடியிருப்பு வாடகை கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே நாடு முழுவதும் சராசரியாக 6 சதவிகித அதிகரிப்பு என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

மேலும், ஒன்று அல்லது இரண்டு படுக்கையறை அபார்ட்மெண்ட்டின் சராசரி விலை ஒரு மாததிற்கு $ 2600-க்கு மேல் செல்லும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.