New year offer 2017

கனடா செய்திகள்

டொரோண்டோ டவுன் ரவுன் பகுதியில் கத்திக்குத்து

01/07/2019

டொரோண்டோ டவுன் ரவுன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆணொருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (திங்கட்கிழமை) காலை ஷெர்போர்ன் மற்றும் குயின் வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கத்திக்குத்து சம்பவம், தொலைபேசிகட்டணம் செலுத்தும் இடத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் உயிர் அச்சுறுத்தல் அற்ற காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபர் 20 வயதுடையவர் என்றும் அவரை கைது செய்து தற்போது தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.