New year offer 2017

கனடா செய்திகள்

ஒட்டாவா பகுதியில் குளிர்பனி தீவிரம் சுற்றுசூழல் கனடா தகவல்

01/07/2019

கனடாவின் ஒட்டாவா பகுதியில் எதிர்வரும் சில தினங்களுக்கு குளிர்பனி -28 செ.மீ அதிகரித்து காணப்படும் என்று சுற்றுசூழல் கனடா தகவல் தெரிவித்துள்ளது.

குறித்த தகவல் தொடர்பாக, சுற்றுசூழல் கனடா அமைப்பினால் ஞாயிற்று கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், திங்கள் மாலை முதல் செவ்வாயன்று மாலை 5 முதல் 10 செ.மீ வரை அழைப்பு விடுத்து சிறப்பு வானிலை அறிக்கையை நடைமுறைப்படுத்துகிறது.

அதனை ஒட்டாவா பள்ளத்தாக்கு பகுதியில் 15 செ.மீ. பனி வரை காண முடிந்தது.

அத்துடன், இன்று மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்பதால் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த குளிர் பனி நாளை முதல் வலுவடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் பொது மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த காலநிலை காரணமாக லண்டனிலுள்ள வீதிகள் மிகவும் அபாயகரமாக இருக்கும் என்பதால் வாகான சாரதிகள் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.