New year offer 2017

கனடா செய்திகள்

ஹமில்ட்டனில் வீட்டை உடைத்து கை வரிசையை காட்டிய நபர்கள் பொலிஸார் விசாரணை

01/08/2019

ஹமில்ட்டனின் கிரவுன் பெயிண்ட் கிழக்கு குடியிருப்பு பகுதியில், வீட்டை உடைத்து கை வரிசையை காட்டிய நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறித்த சம்பவமானது, வடக்கு கிரஹாம் அவென்யூ இல் உள்ள வீடு ஒன்றில்நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவுக்கு சற்றுப் பின்னராக இடம்பெற்றுள்ளது.

இதில், வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களைத் தேடிவருவதாக ஹமில்ட்டன் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும்,இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவிலலை என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.