New year offer 2017

கனடா செய்திகள்

ரொரன்ரோ மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மழையுடனான காலநிலை

01/08/2019

ரொரன்ரோ மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அவதானிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுவாக மேகமூட்டம் காணப்படும் என்றும் பிற்பகல் வேளையில் 60 சதவிகிதம் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் பிற்பகல் 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், குறித்த பகுதிகளில் வெப்பநிலை காலை 6 C ஆகவும் இரவு நேரங்களில் -1 C வரை செல்லும் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அவதானிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த வானிலையே யோர்க் மற்றும் பீல் பிராந்தியங்களில் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.