New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ட்ரம்புடன் கனேடிய பிரதமர் பேச்சு

01/08/2019

கனடாவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வரி விதிப்பு தொடர்பாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பு குறித்து உரையாடல், கனேடிய பிரதமருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (திங்கட்கிழமை) தொலைபேசி மூலம் இடம்பெற்றிருந்தது.

குறித்த தகவல் தொடர்பாக கனேடிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

கனடாவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வரி விதிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த பேச்சுவார்த்தையின் முழு விபரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, இருதரப்பு வர்த்தக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் எதுவும் விவரிக்கப்படவில்லை.

எனினும், இதன்போது வரி விதிப்புகளை தளர்த்துவது குறித்து பேசப்படவில்லை என கனேடிய வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.