New year offer 2017

கனடா செய்திகள்

டொராண்டோ மோதலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் பாதசாரதி

01/09/2019

டொராண்டோவில் இடம்பெற்ற வாகன மோதலில் பெண் பாத சாரதி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, டொராண்டோவின் கிழக்கு யார்க் St. Clair Avenue மற்றும் O’Connor பகுதியில் சரியாக மாலை 6-மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டொராண்டோ பொலிஸார் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் இருந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் எந்த தகவலையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

மேலும், குறித்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.