New year offer 2017

கனடா செய்திகள்

ஸ்கார்பாரோ அபார்ட்மெண்ட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

01/09/2019

ஸ்கார்பாரோவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து Homicide Detectives விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த சம்பவனாது, ஸ்கார்பாரோ பிர்ச்மவுண்ட் ரோடு மற்றும் செயின்ட் க்ளேர் அவென்யூ அருகே குடியிருப்பு பகுதியில் அரங்கேறியுள்ளது.

இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில் சுமார் 2:15 மணி டொரோண்டோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

 

 

இதில், குறித்த அபார்ட்மெண்ட் கட்டிடத்திற்கு வெளியே நடைபாதையில் ஆண் நபர் ஒருவர் இறந்த நிலையில், கண்டனர்.

 

அதேபோன்று, எட்டாவது மாடியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு பெண் இறந்து கிடந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் எந்த சந்தே நபர் குறித்த தகவலும் இது வரை வெளியிடப்படவில்லை.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.