New year offer 2017

கனடா செய்திகள்

கனேடியர்கள் கைது விவகாரம்: ட்ரம்புடன் ஜஸ்டின் ட்ருதியே பேச்சு வார்த்தை

01/09/2019

இரண்டு கனேடியர்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதியுடன் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே பேச்சு வார்த்தை நிகழ்த்தியுள்ளார்.

குறித்த பேச்சு வார்த்தையானது, தொலைபேசி மூலம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதை அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களின் விடுதலைக்காக அமெரிக்கா செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இரண்டு கனேடியர்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு இரண்டு தலைவர்களும் இணங்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, சீன நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி ஒருவரை வன்கூவரில் வைத்து கனேடிய பொலிஸார் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.