New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் கடுமையான பனிப்பொழி வெளியான எச்சரிக்கை

02/05/2019

குறித்த, கனடாவின் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசி வருகின்ற நிலையில்வின்னிபெக்கில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை தொடர்ந்து அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தென் பகுதியை நோக்கி தற்போது குளிர் வானிலை கடந்து செல்லும் நிலையில் தெற்கு மானிடொபா திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை 25C குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மோர்டன் 21C-ல் குளிர்காற்று வீசும் என கனடா சுற்றுசூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேபோன்று, வின்னிபெக் பகுதியில் 12 முதல் 18 c-ல் குளிர்காற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று , ஹாலந்து- 16c, செயின்ட் பியர் ஜோலிஸ்-15c, சாக்சென்ஃபெல்ட்-15c, பிராண்டன்: 15c,சோடா: 14c,மியாமி: 10c பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, குளிர் காலத்தில் மக்களை அவதானமாக இருக்குமாறும், சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போதும் மின்விளக்குகளை ஒளிரச்செய்து அவதானமாக இருக்கவேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.