கனடா செய்திகள்
கியூபெக் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய மாணவன் கைது
02/06/2019கியூபெக் ஆரம்ப பள்ளி ஒன்றில் மாணவியை கத்தியால் குத்திய மாணவன் ஒருவனை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குறித்த சம்பவம், கியூபெக்கின் சாகுனேய்-லா-செயிண்ட்-ஜீன் பிராந்தியத்தில் அல்மாவின் செயிண்ட்-பியர் தொடக்க பள்ளி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
கியூபெக் ஆரம்ப பள்ளி ஒன்றில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரே பள்ளி மாணவர்களிடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பள்ளி மாணவன் ஒருவன் மாணவியை கத்தியால் குத்தியதில் அவர் காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த பள்ளி மாணவன் கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. குறித்த பகுதி, கியூபெக் நகரத்திலிருந்து 175 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.