New year offer 2017

கனடா செய்திகள்

எட்மன்டனில் தொடரும் குளிர் வானிலையில் 518 விபத்து சம்பவங்கள் பதிவு

02/06/2019

கனடாவின் எட்மன்டன் பகுதியில், கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை தொடர்ந்து அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சுமார் பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல்பர்ட்டா மாகாணத் தலைநகர் போன்று, பிராந்தியத்தில் நாளை (வியாழக்கிழமை) வரை தொடர்ந்து குளிர் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பனி மூட்டமான காலநிலை காரணமாக இக்காலப் பகுதியில் அதிகளவு விபத்துகள் சம்பவித்திருப்பதாக எட்மன்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த பகுதியில் சுமார் 518 விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்தோடு, குளிர் காலத்தில் மக்களை அவதானமாக இருக்குமாறும், சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போதும் மின்விளக்குகளை ஒளிரச் செய்து அவதானமாக இருக்கவேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.