New year offer 2017

கனடா செய்திகள்

கனடா வின்ட்சர் பகுதியில் உறைபனி மழை காரணமாக பள்ளி வாகனங்கள் ரத்து

02/06/2019

தென்மேற்கு ஒன்டாரியோ, வின்ட்சர் பகுதியில் நிலவி வரும், கடுமையான உறைபனி மழை காரணமாக பள்ளி வாகனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

குறித்த, கனடாவில் ஒன்டாரியோ, வின்ட்சர் பகுதியில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று ( புதன்கிழமை ) அதிகாலை முதல் கடும் உறைபனி மழை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், தென்மேற்கு ஒன்டாரியோ, வின்ட்சர் பகுதியை சுற்றி அமைந்துள்ள பள்ளி பேருந்து சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வின்ட்சர், எசெக்ஸ், சார்னியா-லாம்ப்டனில், சத்தாம்-கென்ட், லண்டன், மிடில்செக்ஸ், எல்ஜின், ஆக்ஸ்போர்டு ஆகிய அனைத்து பகுதி பள்ளி பேருந்து சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.