New year offer 2017

கனடா செய்திகள்

ஒன்டாரியோவில் கடும் உறை பனி மழை 17 விபத்து சம்பவங்கள் பதிவு

02/07/2019

ஒன்டாரியோவில் உறை பனி மழை காரணாமாக 17 விபத்து சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக OPP அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பனி மூட்டமான காலநிலை காரணமாக இக்காலப் பகுதியில் அதிகளவு விபத்துகள் சம்பவித்திருப்பதாக ஒன்டாரியோ OPP அறிக்கை குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதி வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை தொடர்ந்து அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ,மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்டாரியோவில் குறித்த பகுதியில் உறை பனி மழை காரணாமாக புதன்கிழமை காலை அன்று வரை சுமார் 17 விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்தோடு, குளிர் காலத்தில் மக்களை அவதானமாக இருக்குமாறும், சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போதும் மின்விளக்குகளை ஒளிரச் செய்து அவதானமாக இருக்கவேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோன்று, கனடாவின் லண்டன் மற்றும் ஒண்டாரியோ பகுதியில், கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதிகளை சுற்றி அமைந்துள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வாகான சேவையும், ரத்து செய்யப்பட்டுள்ளது.