New year offer 2017

கனடா செய்திகள்

இரு பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ரொறன்ரோ நபர் கைது

02/07/2019

இரு பெண்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ரொறன்ரோவை சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த, பிளைக்கர் மற்றும் எர்ல் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு பாலியல் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரிடம் ஒரு பெண் தன் விருப்பத்திற்கு எதிராக பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்ததாக வாக்கு மூலம் வழங்கினார்.

இதனையடுத்து, குறித்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிக்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதனை அடுத்து தொடர்ந்தும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அதே குடியிருப்பில் வேறு ஒரு பெண்ணும் மீட்கப்பட்டார்.

இதன் பின்னர், குறித்த சம்பவம் தொடர்பாக வாலஸ் வால்டர் பிளெசண்ட் என்ற 59 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு, குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுநடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.