New year offer 2017

கனடா செய்திகள்

ஒட்டாவாவில் ஏற்பட்ட விபத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயம்

03/08/2019

ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இரண்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.