New year offer 2017

கனடா செய்திகள்

கனேடியர்களின் அதிகளவு நேரம் போக்குவரத்தில் செல்கிறது ஆய்வில் புதிய தகவல்

03/09/2019

கனேடியர்கள் அதிகளவு நேரத்தை போக்குவரத்திற்காக செலவிட்டு வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது.

கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களத்தினால், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் கனேடியர்கள், குறைந்த பட்சம் அறுபது நிமிடங்களை பணிக்காக செல்வதற்காக செலவிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

காரில் பயணம் செய்வர்களே அதிகளவில் இவ்வாறு போக்குவரத்திற்காக நேரத்தை செலவிடுகின்றனர் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.