New year offer 2017

கனடா செய்திகள்

ஒட்டாவாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு பதிவு

03/11/2019

ஒட்டாவா வரலாற்றில் மிகப் பெரிய பனிப்பொழிவு இந்த ஆண்டில் மார்ச் 10-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த,ஒட்டாவாவில் 12.8 செ.மீ. பனிப்பொழிவு மற்றும் 2.2 மிமீ மழை ஞாயிற்றுக்கிழமை மார்ச் 10 ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 1949- ஆண்டு பதிவான 11.2 செ.மீ. பனிப்பொழிவு வரலாற்றில் முக்கிய துவம் வாய்ந்த பனிப்பொழிவாக கருதப்பட்டது.

இதையடுத்து, தற்போது, மார்ச் 10 ம் தேதி பெய்த பனிப்பொழிவு வரலாற்று முக்கிய துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குறித்த ஒட்டாவாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதாக கனேடிய சுற்று சூழல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் செயல்பட எச்சரிக்கை விடுத்திருந்தது . மேலும் வாகான சாரதிகள் தங்கள் வாகனங்களை கவனமாக கையாள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.