New year offer 2017

கனடா செய்திகள்

எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்த கனேடியர்கள் பட்டியல் வெளியீடு

03/11/2019

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 18 கனேடியர்கள் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் விபரங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய விமான விபத்தில் Danielle Moore என்ற வின்னிபெக் பகுதியை சேர்த்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, கல்கரி பகுதியை சேர்ந்த Derick Lwugi என்பவரும் உயிரிழந்துள்ளார்.

Nairobi பிறப்பிடமாக கொண்ட Pius Adesanmi ஒட்டவா கார்ல்டன் பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எட்மன்டன் பகுதியினைச் சேர்ந்த Amina Ibrahim Odowaa என்ற தாயும் அவரது ஐந்து வயதான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.

 

குறித்த விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதில்,Scarborough பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளடங்குவதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.