New year offer 2017

கனடா செய்திகள்

டொரோண்டோ பகுதியில் அரங்கேறிய கொலை சம்பவம் பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

03/12/2019

டொரோண்டோ பகுதியில் அரங்கேறிய கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டொரோண்டோ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கீல் ஸ்ட்ரீட் மற்றும் ஷெப்பார்டு அவென்யூ,பகுதியில் சுமார் 11.20 மணியளவில் திங்கள் இரவு குறித்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது .

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலும்,இது குறித்து பொலிஸார் பொது மக்களிடம் தகவல் தெரிவிக்குமாறு உதவி கோரியுள்ளனர்.