New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

04/10/2019

கனடாவின் பல பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் எட்மன்டன், ஒன்ராறியோ உள்ளிட்ட சில பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

பூங்காக்கள் மற்றும் இரவு விடுதிகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ள நிலையில், கார்களிலிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் இருவேறு பகுதிகளில் ஒரே மாதிரியான கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.