New year offer 2017

கனடா செய்திகள்

கனடா கியூபெக் நகரத்தில் 300000 பேர் தவிப்பு

04/10/2019

கியூபெக்கில் நிலவி வரும் கடும் உறைபனி காரணமாக, மின்தடை ஏற்பட்டுள்ளதால் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

கியூபெக்கில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள், கடுமையான உறைபனி, மழை மற்றும் சூறைக் காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பிராந்தியத்தில் இவ்வறான கடுமையான சூறைக்காற்று, நேற்று(செவ்வாய்கிழமை) இரவு வீசியதால் மரக் கிளைகளை முறித்து வீழ்ந்தது.

இதன் காரணமாக, பல இடங்களில் மின் வடங்கள் அறுந்து போனதாகவும் எனவே மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

இதன் மூலம். சுமார் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

குறிப்பாக இந்த சூறைக் காற்றினால், Laval, Lanaudiere மற்றும் Laurentians பிராந்தியங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், Laval பகுதியில் மின் தடையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக தங்கு மிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.