New year offer 2017

கனடா செய்திகள்

தாய்லாந்தில் வணிக வளாகத்தில் தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

04/11/2019

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகத்தின் 8-வது மாடியில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்தது.

அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதனால் பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது.

மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஒருவர் வணிக வளாகத்தின் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதற்கிடையில் தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.