New year offer 2017

கனடா செய்திகள்

அல்பேனிய விமான நிலையத்தில் ஆயுத முனையில் கொள்ளை

04/11/2019

அல்பேனிய விமான நிலைய ஓடுபாதைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் விமானத்தில் ஏற்றப்படவிருந்த 2.8 மில்லியன் டொலர் பணத்தினை கொள்ளையிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வாகனத்தைத் திருடி, அதில் வருமான வரித் துறையின் சின்னத்தை ஒட்டி, இராணுவ அதிகாரிகள் போல் வேடமிட்டுக் கொள்ளையர்கள் விமான நிலைய ஓடு பாதைக்குள் நுழைந்து கொள்ளையிட்டுள்ளனர்.

இதன்போது, பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொள்ளையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்பேனிய மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, அல்பேனியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், அவற்றின் பணத்தினை வியன்னாவுக்கு அனுப்பி வைத்து வருகின்றது.

இந்த நிலையில், வியன்னாவுக்கு அனுப்பி வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.