New year offer 2017

கனடா செய்திகள்

ஒட்டாவா குடியிருப்பு பகுதியில் தீ விபத்தில் சிக்கி 13 பேர் இடமாற்றம்

04/12/2019

ஒட்டாவா குடியிருப்பு பகுதியில் இடம் பெற்ற தீ விபத்தில் சிக்கி 13-பேர் இடமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து, குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட குறித்த தீ விபத்து தொடர்பில் 911-பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தினர்.

குறித்த தீ விபத்து, ஒட்டாவாவில் 11 லெபிர்டன் செயிண்ட் நார்த் சுற்றியுள்ள பகுதியில், வியாழக்கிழமை மாலை சுமார் 6:20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், சுமார் 13-பேர் குறித்த குடியிருப்பு பகுதியில் இருந்து இடமாற்றம் அடைந்துள்ளனர். இதில், கிட்டத்தட்ட $400,000 மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளனர்.