New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் தலை கீழாக நீருக்குள் கவிழ்ந்த வாகனம் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்

05/08/2019

கனடாவின் கால்கரி பகுதியில், அதிவேகத்தில் விரைந்த வாகனம் ஒன்று நீருக்குள் கவிந்ததால் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.

இதையடுத்து, குறித்த பெண்ணிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில், ஓட்டுநர் காயமுற்ற நிலையில், பயணி காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பியதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் குறித்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குறித்த விபத்து, கனடாவின் கால்கரி Deerfoot Trail-ல் வடக்குப் பகுதி சாலையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.