New year offer 2017

கனடா செய்திகள்

ஒன்ராறியோ செனட் உறுப்பினர் லின் பேயக் இடைநீக்கம்

05/10/2019

ஒன்ராறியோவை தளமாகக் கொண்ட செனட் உறுப்பினர் லின் பேயக் (Lynn Beyak) செனட் சபையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பழங்குடி மக்கள் தொடர்பான கடிதங்களை தனது இணையத்தளத்திலிருந்து நீக்குவதற்கு தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பழங்குடி மக்கள் தொடர்பான கடிதங்கள் இனவாதத்தை தூண்டும் வகையிலானது என நெறி முறைகள் ஆணையாளர் அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அவரது இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த கடிதங்களில் பழங்குடி மக்கள் சோம்பேறிகள் என்றும் தவறுகளை தேடுபவர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.