New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் ஒட்டாவா பகுதி மக்கள் கடும் சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்

05/11/2019

கனடாவின் ஒட்டாவா பகுதியில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக, மக்கள் கடும் சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுமார் 100-க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்ட்டனர்.

இதனை தொடர்ந்து , குறித்த பகுதியில் வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கியூபெக்கின் பொது பாதுகாப்பு அமைச்சு குறித்த எச்சரிக்கை தகவலை விடுத்துள்ளது. இதே வேளை, நீர்மின் அணையொன்று உடைப்பெடுக்கும் ஆபத்து காணப்படுவதாக கியூபெக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.