New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் எட்மன்டன் விபத்தில் சிக்கி ஒருவர் காயம் விசாரணைகள் ஆரம்பம்

05/28/2019

எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து, பாதுகாப்பு வேலி மீது கார் ஒன்று மோதிக்கொண்டதனாலேயே இடம்பெற்றுள்ளது.

இதன் போது காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அண்மைக்காலமாகவே கனடாவில் இவ்வாறான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.